(எம்.ரீ.எம் பர்ஹன்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடயிலான விளையாட்டுப்போட்டிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) டென்னிஸ் 19 வயது ஆண்கள் பிரிவு, பூப்பந்தாட்டம் 19 வயது பெண்கள் பிரிவு, டென்னிஸ் 19 வயது பெண்கள் பிரிவு போன்ற மூன்று போட்டிப் பிரிவுகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்க்காக உழைத்த அதிபர் எஸ் அபூபக்கர், ஆசிரியர், விளையாற்று பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம் ஸகி மற்றும் மாணவ மாணவியர் ஆகியோருக்கு உடற்கல்வி பாட ஆசிரியரும், சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு குழு செயலாளரும்,போட்டிப்பிரிவு பொறுப்பாளருமான எம்.ஆர்.எம் இர்ஷாத் நன்றிகளை தெரிவித்தார்.







0 comments:
Post a Comment