இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் குவாரி கிராமத்தை சேர்ந்த பப்ளி என்ற 4 வயது சிறுமி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் காணாமல் போனாள்.
சிறுமியை காணாமல் தேடி அலைந்த நிலையில், மறுநாள் அவளது சடலம் அருகில் உள்ள நிலத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், மோப்ப நாயின் துணையுடன் பொலிசார் தேடியதில் ரஞ்சித் (23) என்பவனை அது கவ்வி பிடித்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவன் மீது பாரபங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 4 வயது சிறுமியை கெடுத்து கொன்று வீசியது உறுதியானது. இதையடுத்து குற்றவாளியான ரஞ்சித்துக்கு நீதிபதி ராஜேஷ் சிங் மரணதண்டனை வழங்குவதாக தீர்ப்பு அளித்தார்.







0 comments:
Post a Comment