(ஹனீபா)
ஓரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் திண்மக் கழிவு முகாமைத்தவச் செயற்பாடானது முக்கிய பங்கு வகிக்கின்றது அதனை நடைமுறைப்படுத்திவரும் யுனொப்ஸ் நிறுவனத்தின் பணி மகத்தான ஒரு சேவையாகும் என சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சம்மாந்துறைப் பிரதேச சபையுடன் இணைந்து கடந்த மூன்று வருடகாலமாக திண்மக் கழிவு முகாமைத்துவச் செயற்பாட்டை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தி சிறந்த தொழில்நுட்ப உதவி மற்றும் உபகரணங்கள் மற்றும் கழிவகற்றல் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தி வந்த யுனொப்ஸ் நிறுவனத்தின் பணி 2013.06.30ம் திகதியுடன் அம்பாறை மாவட்டத்திலிருந்து நிறைவு பெறுவதையிட்டு அங்கு கடமையாற்றிய அதிகாரிகளை சம்மாந்துறைப் பிரதேச சபையின் மூலம் பாராட்டி கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு இன்று (29) இரவு 8.30 மணிக்கு சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார் அவர் இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் ஒரு பிரதேசத்தின் திண்மக்கழிவகற்றல் செயற்பாடானது சாதாரண காரியமாகாது கூடுதலான பணச் செலவுடன் நடைபெறுகின்ற ஒருவிடயமாகும் இதணை எந்தவொரு பிரதேச சபை அல்லது நகர,மாநகர சபைகளையும் எடுத்துக் கொண்டாலும் அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்கள் அவசியமாகின்றது.
அந்த வகையில் சம்மாந்துறைப் பிரதேச சபைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் யுனொப்ஸ் நிறுவனம் ஆற்றிய பணிகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும் அதற்காக எமது சபையின் உறுப்பினர்கள் ஊழியர்கள்.மற்றும் ஊர்மக்கள் அனைவர்கள் சார்பாகவும் யுனொப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சிலியா மாக்கஸ், பயிற்சி முகாமையாளர் அணா செக்ரமண்டோ, மற்றும் வள மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எம். ஆசீர் அகியோருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் திட்ட முகாமையாளர் சிலியா மாக்கஸ், பயிற்சி முகாமையாளர் அணா செக்ரமண்டோ, மற்றும் வள மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எம். ஆசீர், உதவிதவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள்மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்த நிகழ்வில் யுனொப்ஸ் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு இராப்போசனத்துடன் நிணைவச் சின்னம் மற்றும் பொன்னாடை எனபன வழங்கி வைக்கப்பட்டன.









0 comments:
Post a Comment