(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தில் 44.2 மில்லியன் ரூபா செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பிரதேச செயலக கட்டிடத் திறப்பு விழா இன்று (29) நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி றிபாஉம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்றது.
இந்த கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதீதியாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, மாகாண வீதி அபிவிருத்தி நீhப்பாசணதுறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஜினசேன உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் புதியகட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன் விNஷட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலிகள், முச்சக்கர வண்டிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் பட்டதாரி பயிலுனர் சிலருக்கு நிரந்தர நியமனக் கடிதங்களும் அமைச்சரினால்; வழங்கி வைக்கப்பட்டன இதேசமயம் பிரதேச செயலாளர் அவர்களினால் அமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.











0 comments:
Post a Comment