தென்னாப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சுவாசித்து வருவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தென்னாப்ரிக்க நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு ஒன்றில், வைத்தியசாலை அளித்த அறிக்கையில் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், நெல்சன் மண்டேலாவுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு, அதன் உதவியோடுதான் அவர் சுவாசித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
94 வயதான நெல்சன் மண்டேலா நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8ஆம் திகதி பிரிட்டோரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மண்டெலா கடந்த ஆறு மாதங்களில் நான்காவது முறையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து நாட்களாக கவலைக்கிடமான நிலையியேயே இருந்தார். மண்டேலாவின் உடல்நிலை சீரமைய வேண்டும் என 32 மில்லியன் மக்கள் தொடர்ந்து பரார்த்தித்து வந்தனர்.
1918ஆம் ஆண்டு ஜூலை 18ஆண்டு பிறந்த நெல்சன் மண்டேலா, நெல்சன் ரோபிசலா மண்டேலா என்ற இயற் பெயரைக் கொண்டவர்.
இவர் தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ன பெருமைக்குரியவர்.
தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.
0 comments:
Post a Comment