(அகமட் எஸ்.
முகைடீன்)
கல்முனை மாநகர சபையின்
பொறியியல் மற்றும் சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற பணியினை
துரிதப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது
உத்தியோகத்தர்கள் தமது பணிகளை துரிதப்படுத்துவதில் உள்ள குறைகள் தொடர்பில் முதல்வர்
கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கேட்டறிந்து அதற்கான தீர்வினையும் வழங்கினார்.
எதிர்காலத்தில்
குறித்த பிரிவினர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள் எவ்வித தடங்கலும் இன்றி
துரிதமாக இடம்பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இக்கலந்துரையாடல்
கூட்டத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி மற்றும்
உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.







0 comments:
Post a Comment