பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதேகார் சாஹிப் மாவட்டத்தில் நபிபூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 12 வயது முஸ்லிம் சிறுவன் அர்ஷித் அலி கான் வாலுடனேயே பிறந்தார். இவரை அனுமார் என்று கும்பிட்டு வருகின்றனர். கீழ் முதுகுப் பகுதியில் விலங்குகளுக்கு இருப்பது போலவே அவருக்கு வால் முளைத்துள்ளது. பிறவியிலேயே அப்படித்தான். இந்தச் சிறுவனை இந்துக் கடவுள் அனுமன் என்றே கும்பிட்டு வருகின்றனராம். பல ஊர்களில் இருந்தும் வந்து இந்தச் சிறுவனுக்கு காணிக்கைச் செலுத்தி கும்பிட்டு வருகின்றனராம். பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் கும்பிட வருவதாக சிறுவனின் தாத்தா இக்பால் குரேஷி கூறுகிறார். கருவில் ஏற்பட்ட ஏதோ கோளாறினால் வால் போன்ற அமைப்புடன் பிறந்த இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து சமுதாயத்தில் நடமாட வைக்காமல் அவரை தெய்வமாக வழிபட அந்தக் குடும்பம் அனுமதித்து வருகிறது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment