இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/30/2013

இங்கிலாந்தில் பாடசாலை மாணவிகள் பாவாடை அணிய தடை

இங்கிலாந்தில் சமீப காலத்தில் 63 உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவிகள் பாவாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும், தற்போது இந்த நடைமுறையை ஒன்பது வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள மாணவிகள் கல்வி பயிலும் நடுநிலைப் பாடசாலை ஒன்றும் பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

ஒர்செஸ்டர்ஷயரில் உள்ள ரெட்டித் என்னும் இடத்தில் செயல்பட்டு வரும் வாக்வுட் சர்ச் என்ற நடுநிலைப் பாடசாலை, வரும் செப்டம்பர் முதல் தங்கள் மாணவிகளுக்கு முழு பேன்ட் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

இதுமட்டுமின்றி, வரும் 2014-ம் ஆண்டு முதல் இருபாலருக்கும் ஒரேவிதமான சீருடைத் திட்டத்தையும் கொண்டுவர உள்ளது.

மாணவிகள் மிகவும் உயரம் குறைவான பாவாடைகளை அணிந்துவருவதால் கீழே அமர நேரிடும்போது மிகவும் கண்ணியக்குறைவாக உள்ளது என்று அப் பாடசாலையின் தலைமை ஆசிரியர் டேவிட் டவுட்பயர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் நீளமான பாவாடையை அணிந்து வரவேண்டும் என்று மாணவிகளை வற்புறுத்தும்போதும், அவர்கள் தாங்கள் பார்க்காத சமயங்களில் தங்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலை பிரச்சினைக்கு உள்ளதாக மாறுவதால் சீருடையை எளிமைப்படுத்தும் விதத்தில் மாற்றி அமைப்பதாக அவர் கூறினார்.

மேலும், இந்த மாற்றம் குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெறும் என்றார். பாடசாலை நிர்வாகத்தின் இந்த முடிவு வேடிக்கையானது என்று விமர்சித்துள்ள சில பெற்றோர்கள், இதனால் மாணவிகளுக்கு குழப்பம் ஏற்படக்கூடும் என்று கருதுகின்றனர்.

20-க்கும் மேற்பட்ட பெற்றோகள் கடிதம் மூலம் பாடசாலை நிர்வாகத்திடம் இந்தத் தடை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா