இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/30/2013

பாப்பரசர் பிரான்ஸிஸை இலங்கை வருமாறு அழைப்பு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி பாப்பரசர் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இந்த விஜயம் அமையுமானால் அது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் மூன்றாவது பாப்பரசராக பிரான்ஸிஸ் கருதப்படுவார்.

1977ம் ஆண்டு முதன்முறையாக நான்காவது போல் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

1995ம் ஆண்டு பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது பௌத்த பிக்குகளின் எதிர்ப்பு காரணமாக அவர் குண்டு துளைக்காத வாகனத்திலேயே இலங்கையில் பயணம் செய்யவேண்டியிருந்தது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா