(KSA.அஹமத்)
ஏறாவூர் சமூக சேவைகளுக்கான பட்டதாரிகள் அமைப்பின் தமது சமூக சேவைகளின் ஒரு அங்கமாக இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் A/L பரீட்சைக்குத்தோற்றவுள்ள கலைப்பிரிவு மாணவர்களுக்காக வேண்டி இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கு ஒன்று இன்று (30.06.2013) ஏறாவூர் மட்/மம/அலிகார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களும் மற்றும் அதிதிகளாக யு.இஸ்ஸதீன் (அதிபர்-அலிகார் தேசிய பாடசாலை), ஆயுஊ. ஹிதாயத்துல்லாஹ், Nஆ. நியாமத் பைஸல்(கணக்காளர்), னு.அனஸ் (மேஜர்) ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் இஸ்லாமிய நாகரீக கருத்தரங்கானது பிரபல ஆசிரியர் அஸ்ஸேஹ் ஆவுஆ. றிஸ்வி(மஜீதி) அவர்களினால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் கருத்தரங்கிற்கு ஏறாவூர் மாணவர்கள் மட்டுமன்றி காத்தான்குடி, ஓட்மாவடி மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.








0 comments:
Post a Comment