
பாகிஸ்தான் அணி வீரர்களின் இந்த செயலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுப்பாகியுள்ளதாம்.
பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள ஜூனைத் கான், அன்வர் அலி, அலி அசாத் ஆகியோர்தான் இவ்வாறு நடனத்தை பார்த்து சிக்கியவர்கள்.
லாகூரில் உள்ள பிரபலமான தியேட்டர் ஒன்றுக்குப் போன இவர்கள் மூவரும், அங்கு நடந்த அரைகுறை ஆடை அணிந்த அழகிகளின் ஆபாச நடனத்தைப் பார்த்து இரசித்துள்ளனர்.
இதனை பாகிஸ்தானின் தொலைக்காட்சி ஒன்று இரகசியமாக படம் பிடித்து வெளியிட்டு மானத்தை வாங்கி விட்டனர்.
சிம்பாப்வே தொடருக்காக கிளம்புவதற்காக முன்பாக மூன்று வீரர்களும் இந்த காட்சியைப் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனராம்.
இவர்கள் போனது தியேட்டர் என்றாலும் கூட அங்கு படம் காட்டப்படுவதில்லை. மாறாக ஆபாச நடிகைகள் வந்து அங்கு குத்தாட்டம் போட்டுக் காட்டுவார்கள். அதைப் பார்க்கத்தான் இவர்கள் போயுள்ளனர்.
0 comments:
Post a Comment