இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/31/2013

சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவரின் வேண்டுகோள்


(ஹனீபா)
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படாதவாறு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வேட்பாளர்களும் செயற்பட வேண்டும் என சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயீஸ் வஹாப்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

'இந்த நாட்டின் அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் என்றுமில்லாதவாறு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக தமது சமய உரிமைகளைப் பேணுவதிலும் பொருளாதார நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதிலும் பள்ளிவாசல்களைப் பாதுகாப்பதிலும் முஸ்லிம்கள் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுஇ பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன. இதன்போது முஸ்லிம் அரசியல் தலைமைகளும் வேட்பாளர்களும் மிகவும் நிதானமாக- பொறுப்புணர்வுடன் தமது பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக தேர்தல் இடம்பெறுகின்ற மத்திய மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்கள பௌத்த கடும்போக்கு வாதிகளின் கழுகுப் பார்வைக்குள் சிக்குண்டு மிகவும் பீதியான ஒரு சூழலில் காணப்படுகின்றனர்.

இதனால் இப்பகுதி முஸ்லிம்களின் கல்விஇ கலாசாரஇ சமூகஇ பொருளாதார துறைகளின் பாதுகாப்பு மற்றும் இருப்பு குறித்தே கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற போக்கில் நாம் ஒருபோதும் சமூகத்தில் இனவாதப் பிரசாரங்களையோ உணர்ச்சிகரமான நடவடிக்கைகளையோ
மேற்கொண்டு விடக் கூடாது.

ஏனெனில் மத்திய மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களப் போது மக்களுடன் முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமையுடனேயே வாழ வேண்டியுள்ளது.

ஒரு சில சிங்கள கடும்போக்குவாத குழுக்கள் மேற்கொள்கின்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக சிங்கள சமூகத்தை நாம் பகைத்துக் கொள்ள முடியாது.

அது போன்றே தமிழீழ புலிகளால் வடக்கில் இருந்து நமது சகோதர முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இரு தசாப்தங்களுக்கு மேலாகியும் யுத்தம் முடிவுற்று நான்கு வருடங்களாகியும் அந்த முஸ்லிம் மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்ல.

அதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளுக்கு பாரிய முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றன. இதனைக் கூட புலிகளுக்கு சார்பான ஒரு குழுவினரே மேற்கொள்கின்றனர். அதனால் இது விடயத்தில் ஒட்டு மொத்த தமிழர்களையும் நாம் குற்றம் சாட்ட முடியாது.

ஆகவே சிங்கள தேசியமும் தமிழ் தேசியமும் ஆட்சி செலுத்தக் கூடிய இரு பகுதிகளில் அவற்றுடன் முரண்பட்டுக் கொள்ளாமல் முஸ்லிம் தேசியம் எவ்வாறான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதில் நமக்குள் தெளிவு ஏற்பட வேண்டும்.

தேர்தல் வெற்றியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவ்விரு தேசியங்களையும் முற்றாகப் பகைத்துக் கொள்ளும் வகையிலும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் முஸ்லிம் தரப்பினரின் பிரசாரங்கள் அமைந்து விடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு கொள்கையுடன் நமது பிரதிநிதித்துவங்களை வென்றெடுப்பதற்காக தேசிய ஒருமைப்பாட்டையும் இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பிரதேச அபிவிருத்தியையும் வலியுறுத்தி நமது பிரசாரங்களை முன்னெடுப்பதன் மூலம் அது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கும் சாதகமாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா