இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/31/2013

சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை


(முஹம்மட் ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
பொலிஸ் திணைக்களத்தின் 147 வருட சேவையினையிட்டு சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பொலிஸ் நடமாடும் சேவை நேற்று (30) வெள்ளிக்கிழமை வீரமுனை ஆர்.கே.எம். மகாவித்தியாலயத்தில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.அமீர்(ஐபி) தலைமையில் நடைபெற்றது.

இந்த பொலிஸ் நடமாடும் சேவையின் ஆரம்ப வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பத்திரன(ஐபி), குற்றவியல் பொறுப்பதிகாரி (ஐபி) ஆபேவர்த்தன, மாவட்டபதிவாளர் பீ.எம்.எம்.சத்தார் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலைமாணவர்கள,; பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள்,பாஸ்போட், அடையாளஅட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளல், மத்தியஸ்த சபையின் சேவைகள், வைத்திய ஆலோசனைகள் என்பனவும் இடம்பெற்றன.
அத்துடன் பாடசாலை மட்டத்தில் டெங்கு தொடர்பாக நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு விதிகள் தொடர்பான விளக்கங்களும் மோட்டார் போக்கு வரத்துப் பொலிஸ் பிரிவினால் வழங்கப்பட்டன.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா