இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/16/2013

சம்மாந்துறையில் மாணவன் கார் செலுத்தி பலருக்கு காயம் (படங்கள் இணைப்பு)

(அபூபக்கர்)
சம்மாந்துறையில் இன்று (2013.08.16) நபர் ஒருவர் கார் செலுத்தி சிலருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

இது தொடர்பாக மேலும் அறிய வருவதாவது : காரை வேகமாக செலுத்தியயதால் மாசிலா மணி ,சிறபா என்னும் சிறுமிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக விபாத்துக்குள்ளான மாசிலா மணி விபத்து பற்றி விபரிக்கும் போது: தான் சம்மாந்துறை விளினயடி அருகாமையில் நெல் மிசின் வண்டிக்கு பின்னால் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் தன்னை மோதியதாகவும் தான் அருகில் இருந்த வடி கானில் விழுந்ததாகவும் கூறினார்.

மேலும் சிறுமி சம்மாந்துறை அல் அரசத் பாடசாலைக்கு அருகாமையில் விபாத்துக்குள்ளகியதாகவும் அறிய முடிகிறது.இக் கார் சம்மாந்துறையில் பல பகுதிகளிலும் வேகமாக செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகிறது. 

இவ்வாறு விபத்தை ஏற்படுத்திய நபர் ஒரு மாணவர் என்றும் அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா