இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/11/2013

கிராமிய மட்ட அபிவிருத்தித் திட்ட வரைபு வெளியீட்டு விழா


(ஹனீபா)
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் கிராமிய மட்ட அபிவிருத்தித் திட்டம் மற்றும் பிரதேச மட்ட அபிவிருத்தித் திட்டம் என்பவற்றின் திட்ட வரைபு(பிளேன்) உத்தியோக பூர்வ வெளியிட்டு விழாவும் அதற்கு பங்களிப்பு செய்த பட்டதாரி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (11) புதன் கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், அம்பாறை மாவட்ட யூ.என்.டீ.பி தலைமை அதிகாரி எம்.ஏ.சலீம்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள், ஊர்பிரமுகர்கள், கிராமமட்டத் தலைவர்கள்; பிரதேச செயலக உத்தியோகத்தார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
\
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் உரையாற்றுகையில் கிராமியமட்ட மற்றும் பிரதேசமட்ட அபிவிருத்தித் திட்ட வரைபை உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைப்பதற்காக துரித நடவடிக்கையினை மேற் கொண்ட பிரதேச செயலாளருக்கும் அவருடைய செயலக பணியாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தற்போது சம்மாந்தறைப் பிரதேசத்தில் பலதினங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று  வருவதை ஊடகங்கள் மூலமாகவும் இப்பிரதேசத்தின் அரசியல் தலைமைகளாலும், பிரதேச செயலாளர் மூலமாகவும் நான் அறிந்து கொண்டுள்ளேன்.

இந்தப் பிரச்சினை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருவதை காணக் கூடியதாகவுள்ளது இந்த காட்டு யானைகளின் தாக்கத்திலிருந்து அம்பாறை மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்துக்காக அதாவது கரையோர யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக 12 வேலைத்திட்டங்களுக்கு 120 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வனவிலங்குத் திணைக்கத்தின் அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்ததார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளரினால் திட்ட வரைபு புத்தகத்தினை மாவட்ட செயலாளரிடம் கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது அத்துடன் இந்த நிகழ்வின் போது சம்மாந்துறை வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட 20 பாடசாலைகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மாவட்டசெயலாளரினால் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா