இன்று (11) நல்லிரவு 1.00 மணியளவில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் பின்புறமாகவுள்ள மதில் சுவர்களை உடைத்துக் கொண்டு வைத்திய சாலைக்குள்; நுளைந்த காட்டு யானைகள் அங்குள்ள வாழைமரங்களை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வைத்திய சாலை தங்கியிருந்த நோயாளிகள் பலர் கத்திக் கொண்டு ஓட்டம்பிடித்துள்ளனர் மக்களின் ஆரவாரத்தை அடுத்து வைத்தியசாலையின் எம்.ஓ.எச்.விடுதின் முன்பாகவுள்ள மதில் சுவர்களை உடைத்துக்கொண்டுவெளியே சென்று சம்மாந்துறைப் பொலிஸ் வீதியிலுள்ள கடையொன்றை உடைத்துள்ளது அதனை தொடர்ந்து ஊரக்குள் நுளைந்த யானை பலருடைய வீடுகளுக்குள் நுளைந்து மதில் சுவர்கள் கேற்கள் என்பவற்றை உடைத்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்றுள்ள இந்த நிகழ்வானது 5வது தினமாக இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் சம்மாந்துறைப் பிரதேசம் அண்மைக்காலமாக காட்டுயானைகளினால் பாதுகாப்பற்ற பிரதேசமாக காணப்படவதுடன் இந்த காட்டு யானைகளின் தொல்லையினால் அப்பிரதேசத்திலுள்ள மக்கள் பாரிய உயிராபத்துக்கும் அச்சத்துக்கும் மத்தியில் இரவுப் பொழுதுகளைக் கழித்துவரும் வேளையில் அம்மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரைக்கம் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமை கவலைக்குரிய விடயம் என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment