இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2013

பொது இடங்களில் லிப் டு லிப் முத்தத்திற்கு தடை - ஆஸ்திரிய அரசு


ஸ்திரிய அரசு பொது இடங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் காதலர்கள் பொது இடங்களில் கொடுக்கும் லிப் டு லிப் முத்தம் முதல் சிகரெட் பிடிப்பது வரை பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை உத்தரவுகளுக்கு பெரும்பாலானோர் ஆதரவும் சிறிய அளவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, லிப் டு லிப் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில்,பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும்,தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா