இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/07/2013

சம்மாந்துறையில் அதிகரிக்கும் யானைத்தொல்லையும் இதுவரை தீர்வுகானாத அதிகாரிகளும்

(எம்.ரீ.எம்.பர்ஹான்,ஹனீபா,)
கடந்த காலங்கலாக சம்மாந்துறையில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆனால் இதுவரையில் உரிய அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் உள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த கலங்களில் சம்மாந்துறையில் யானைகளின் அட்டகாசம் என பல்வேறு வானெலிகள் தொலைகாட்சிகள் இணையத்தளங்கள் உட்பட பத்திகைகளிலும் செய்திகள் வெளிவந்ததை யாவரும் அறிந்திருப்பிர்கள்.

அதுமட்டும் அல்லாமல் சுமார் ஒரு வருடத்துக்கு முன் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் வசித்த மூதாட்டி ஒருவரும் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிளந்தார் மட்டுமன்றி பல்வேறு விவயாக காணிகள் யானைத்தாக்கத்துக்கு இலக்காகி இருந்ததுடன் சம்மாந்துறை நெல்லுப்பிடி சந்தியிலும் யானைகள் நின்று கொண்டு பயனிகளுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்திருந்ததையும் மறக்க முடியாது.

ஆந்த வகையில் இன்று (07.09.2013) அதிகாலை 3.00 மணியளவில் சம்மாந்துறை அலவக்கரைப் பிரதேசத்துக்குள் நுளைந்த காட்டு யானைகள் அப்பிரதேசத்திலுள்ள பல வீடுகளுக்குள் நுளைந்து அங்குள்ள வீட்டுத் தோட்டங்கள், மதில்சுவர்கள், நெற்களஞ்சியங்கள் என்பவற்றை உடைத்தும் நெற்களஞ்சியங்களில் இருந்த நெல் மூடைகளை வைளியில் ஏடுத்த குடித்துள்ளதுடன் பலத்த சேதத்தையும் ஏற்படத்தியுள்ளது.

இது தொடர்பாக சேதமாக்கப்பட்ட வீட்டு உரிமையாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான முகம்மட் அலி அஹமது அவர்கள் கருத்தை வினவிய போது தான் அதிகாலை சுபஹ் தொழுகைக்காக எழுந்த போது பாரிய ஒர் உருவம் தனது களஞ்சிய அறை அருகில் நின்றதாகவும் தான் அச்சம் காரணமாக உடணடியாக அந்த இடத்துக்கு செல்லவில்லை , தாமாதாக சென்ற போது தனது மதில் சுவரை உடைத்து தனது களஞ்சிய அறையையும் உடைத்து அங்கிருந்து நெல் மூட்டைகுக்கும் சேதம் விளைவித்ததாக கூறினார்.

இன்று அருகி வரும் விலங்கினங்களை பாதுகாக்க பல்வேறு சட்டங்களை எற்படுத்தி இருக்கும் அதிகாரிகள் எல்லாப்படைப்பினங்களுக்கும் மேலான மனித இனத்தை இந்த காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா????






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா