இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/22/2013

இஸ்லாமிய பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

(ஹனீபா)
இஸ்லாமிய பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2000 ஆண்டின் பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட 1325 ஆவது பிரேரனை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான ஆதரித்து வாதிடல் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் செயலமர்வு இன்று (22) ஞாயிற்றுக் கிழமை கல்முனை வாடி வீட்டு வீதியிலுள்ள இஸ்லாமிய பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்றது.

செயல் முன்னணியின் கிழக்கு மாகாண சிரேஷ;ட நிகழ்சித்திட்ட அதிகாரி எம்.எஸ்.ஜலீல் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் அம்பாறை கரையோர மாவட்டத்தை சேர்ந்த 20 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு பெண்களுக்க எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் அதற்கான சட்ட வரைபுகள் தொடர்பாகவும் இந்த நடைமுறையில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா