இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/13/2013

இரண்டு மில்லியன் ரூபா செலவில் வீதி அபிவிருத்தி


-ஹனீபா

தேசத்திற்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நற்பிட்டிமுனை-02ம் பிரிவிலுள்ள கிணற்றடி வீதி இரண்டு மில்லியன்; ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் திங்கட் கிழமை நேற்று (11) மாலை இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது பத்து இலட்சம் ரூபா செலவில் இவ் வீதியில் அமைக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தினையும் பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.லவநாதன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜ குலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில்
 இவ்வேலைத்திட்டத்திற்கு மொத்தமாக மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா