இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/28/2013

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு

-ஹனீபா
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (28) வியாழக்கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கெட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 58 பட்டதாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் ஏனைய அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள 56 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் மொத்தம் 114 பேர் இன்று நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொண்டனர்.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்வீஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்;, சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட பலர் கலந்த கொண்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா