இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/28/2013

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

-ஹனீபா
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் கீழ் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தினுள் உள்வாங்கும் பொருட்டு முகாமைத்துவ சேவைக்குள் உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கிழ் சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (28) மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிர்வாக உத்தியோகத்தர் அப்தல் வாஹீட், சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.எல்.ஏ.ஹமீட், உம்மு ஹிதாயா, எஸ்.எல்.எம்.மசூர், ஏ.ஜினேந்திரன் உட்பட பலர் கலந்த கொண்டனர்.சம்மாந்தறைப் பிரதேசத்தில் கடமையாற்றும்  76 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழுங்கப்பட்டன இவற்றில் முகாமைத்துவ உதவியாளர் தரம் 1 க்கு 47 பேரும், தரம் 2 க்கு 19 பேரும், தரம் 3க்கு 10 பெரும் நியமனம் செய்யப்பட்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா