இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/29/2013

கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு இணக்கம்

-ஹனீபா
கொய்க்கா திட்டத்தின் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு கொய்க்காவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பார்க் சூக் இணக்கம் தெரிவித்தள்ளார்.

ஆசிய மன்றத்தின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லீம் காங்கிரஸ் குழுத்தலைவருமான ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம் பெற்ற சந்திப்பின்போதே இவ் அபிவிருத்திக்கான இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்க்கா தலைமை அலுவலகத்தில் நேற்று முந்தினம் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கிழக்க மாகாண முதலமைச்சர் நஜீப் அப்தல் மஜீட், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டு கல்முனைப் பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட கொய்க்காவின் வதிவிடப் பிரதிநிதி இந்த ஆண்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்முனை தனியார் பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் நிர்மானிப்பதற்கு 2 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதன் மூலம் பிரயாணிகளினதோ பஸ்நடத்துனர்களினதோ பயன் பாட்டுக்கு உதவாத ஒன்றாக காணப்படுகின்ற கல்முனை தனியார் பஸ் நிலையத்தை சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்வதுடன் ஒற்றுமை சதுக்கம் எனும் பெயரில் வியாபார மற்றும் பொழுது போக்கு வசதிகளையும் ஏற்படுத்தி இரவு நேரத்திலும் கல்முனை நகரை இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா