இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/29/2013

அம்பாறை மாவட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியான மாவட்டமாகும்:நீல் டி அல்வீஸ்


-ஹனீபா
அம்பாறை மாவட்டம் ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியான மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் மூன்று இனமக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் தெரிவித்தார்.

தயட்டகிருல்ல வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தில் மேற் கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) மாலை நடைபெற்ற போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையுhற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகத்தின் பிரதானியாக அதாவது மாவட்ட செயலாளராக நான் ஒருபௌத்தனாக இருக்கின்றேன் அதே போன்று ஒரு இந்து மதத்தை சேர்ந்த விமலநாதன் உதவிச் செலாளராக இருக்கின்றார் அதே போன்று இந்த மாவட்டத்தின் என்னுடைய வலதும் இடதுமாக கையாக இருந்து பணியாற்றுகின்ற இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இதே ஊரைச் சேர்ந்த பிரதான கணக்காளர் ஹூசைன், பிரதான பொறியியலாளர் றாசீக், அதுபோலவே மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் அன்வர்தீன் உட்பட பல பிரதேச செயலாளர்கள் முஸ்லீம்களாக இருந்து கொண்ட இந்த மாவட்டத்தின் பணிகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த தயட்ட கிருல்ல தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டம் முன்னெடுக்கின்ற போதும் எந்தவெரு பிரச்சினைகளும் இல்லாமல் பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்தது எனது நிர்வாகத்தை செய்வதில் எனக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அவர்களாகும் அத்துடன் நான் ஒரு வேலைத்திட்டத்தை செய்வதாயின் என்னுடைய காரியாலய பிரதானிகளுடன் பேசித் தீர்மானித்து பொறுப்புக்களை ஒப்படைக்கின்ற போது அதனை இரவுபகல்பாராத அற்பணிப்புடன் செயலாற்றி எனக்கு அறிக்கைகளை வழங்குகின்றனர் அந்த வகையில் பிரதான பொறியியலாளர் றாசீக், பிரதான கணக்காளர் ஹூசைன், திட்டமிடல் பணிப்பாளர் அன்வர்தீன் ஆகியோர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

அதே போன்று தான் இந்த சம்மாந்துறைப் பிரதேசத்தின் தவிசாளர் நௌஷhட் அவர்கள் நான் இந்த மாவட்டத்துக்கு வருகை தந்த பொது முதலில் சந்தித்தவர் நௌஷhட் ஆவார் அவர் மிகவும் சாதுவாக தமது பிரதேச மக்களின் தேவைகளை நியாய பூர்வமாக உணர்ந்து செயற்படுத்துவார் அவர் அவருடைய ஊருக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக் கொள்வார் அந்த வகையில் நௌஷhட் அவர்களுக்கும் இந்த பிரதேசத்தின் செயலாளர் மன்சூர் அவரும் அவருடைய பணியை செவ்வனே செய்து வரகின்றனர் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சம்மாந்துறைப் பிரதேசத்தில் தயட்டகிருல்ல வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக மிகக் கூடுதலாக 109.7 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது அதன் பின்னர் அப்பிரதேச விவசாயிகளின் நெற்களை களஞ்சியம் செய்வதற்கு போதுமான களஞ்சியம் போதாமல் இருப்பது தொடர்பாக கூறப்பட்டது உண்மையாகவே அதுகட்டாயமான தேவை என்பதனால் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டு அதற்காக 25 மில்லியன் ரூபாய்கள் ஒதக்கப்பட்டு அது பொறுத்தமான இடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அதுமாத்திரமன்றி இந்தப் பிரதேசத்தில் இந்த வேலைத்த்ட்டங்களின் கீழ் பல வேலைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் நான் இந்த வேலைத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொள்ளக் கிடைத்தது மிகவும் சந்தேசமாகும் அந்த வெலைத்திட்டம் கூட இந்த மாவட்டத்தில் ஒரு முனமாதிரி வேலைத்தட்டமாகும் ஏனைய பிரதேசத்தவர்கள் கொப்பி பன்னும் வகையில் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும் எனவும் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா