இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/26/2013

கொரிய உயர்மட்டக் குழு கல்முனை மாநகர சபைக்கு விஜயம்

-ஹனீபா

கொரிய நாட்டு கொய்கா நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவொன்று, செவ்வாய்க்கிழமை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர சபையின் பல்வேறு வேலைத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.

இவை தொடர்பான விசேட கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆளுகை செயற்திட்டத்தின் கீழ் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் தின்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்டம் குறித்த முழுமையான அறிக்கையை மாநகர ஆணைடாளர் ஜே.லியாகத் அலி சமர்ப்பித்து-விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து அத்திட்டத்தை மேலும் இலகுபடுத்தி விஸ்தரிப்பதற்கான வழி வகைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது இத்திட்டத்தை எதிர்காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தான் உத்தேசித்துள்ள நடைமுறைகள் குறித்த ஆலோசனைகளை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் முன்வைத்து தெளிவுபடுத்தினார்.

அத்துடன் இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையில் புPளு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. இவை தவிர மற்றும் பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கொய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளான பேராசிரியர் லீ டொங் ஹூன் சூஇ பேராசிரியர் சுன் மேன்இ ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ரிஷாத் ஷரீப் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஹலீம் ஜௌசிஇ தின்மக்கழிவு முகாமைத்துவ பொறுப்பாளர் என்.எம்.எம்.அகரம்இ நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை அலுவலக பொறுப்பதிகாரி எம்.எம்.முர்சிதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொரிய நாட்டு கொய்கா நிறுவனம் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை நகரில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கு ஏற்கனவே உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா