இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/31/2013

திவிநெகும வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமானம்

(ஹனீபா)
'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) இலங்கையின் வறுமைக் குறைப்புக்கான புதிய பரிமானம் 2014.01.03ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுகின்றது.

சமுகத்தின் வறுமையை ஒழித்து, வாழ்வாதார அபிவிருத்தியை முன்னெடுத்து சமூக சமத்துவத்தை ஏற்படத்துவதை இலக்காகக் கொண்ட பிரதான தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டமான 'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) வேலைத்;திட்டத்தின் புதிய பரிமானமான திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் (வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம்) இன்றைய தினம் 2014.01.03 தாபிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அன்று மஹிந்த சிந்தனை தூரநோக்கு வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தனிநபர் மற்றும் குடும்பங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக கிராமத்தை அபிவிருத்தி செய்து வறுமையற்ற இலங்கையை உருவாக்குவதற்கான தேசிய அபிவிருத்திப்பணி 'திவிநெகும' வேலைத்திட்டமாக உருவாக்கப்படகின்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ அவர்களின் முழுமையான ஆலோசனை, வழிகாட்டல் என்பவற்றுக்கு அமைவாக உருவாக்கப்படுகின்ற இந்த வேலைத்திட்டம் இன்று முழுநாட்டு மக்களினதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபை, மலைநாட்டு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம்,மலைநாட்டு கமத்தொழில் மறுசீரமைப்பு திணைக்களம். ஆகிய ஐந்து நிறுவனங்களினதும் பௌதீக மற்றும் மனிதவளம்; உள்ளிட்ட அனைத்தையும் ஒன்று சேர்த்து 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் கிழ் இப்புதிய திணைக்களம் தாபிக்கப்படகின்றது.

'திவிநெகும' வேலைத்திட்டத்தினூடாக எமது நாட்டின் சகல மக்களினதும் உணவுப்பாதுகாப்பு நிலையினை உறுதிசெய்து அவர்களின் வருமான மட்டத்தினை உயர்த்தி நற்பண்புகளை மேம்படுத்தி சமுக, பொருளாதார, கலாசார துறைகளில் அபிவிருத்தியை எற்படுத்தி மஹிந்த சிந்தனை தொலை நோக்கின் நோக்கத்தை நிறைவு செய்து இலங்கையின் வறுமையினை 6 வீதமாக குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது.

அதேபோன்று சமுர்த்தி திட்டத்துடன் இணைந்தள்ள 27000 ஆயிரம் உத்தியோகத்தர்களினதும் தொழில்பாதுகாப்பினை உறுதி செய்து அவர்கள் அனைவரும் ஓய்வூதியத்துடன் கூடிய பூரண உத்தியோகத்தர்களாக திவிநெகும திணைக்களத்தினுள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர் இதனால் உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு நன்மைகளையும் பெறவுள்ளனர்.

கிராமப்புர வறிய மக்களுக்கு குறுநிதி வசதிகளைச் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதரத்தை மேம்படுத்துவதில் சமுர்த்தி வங்கி அமைப்பு இன்று முன்னிலை பெற்றுள்ளது. இந்த வங்கி கட்டமைப்பு எதிர்காலத்தில் 'திவிநெகும' வங்கி வலையமைப்பாக வியாபிக்கப்படவுள்ளது  இதற்கு ஏற்ற வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை தமது பணிக்குழுவுக்கு இலங்கை சமுர்த்தி அதிகாரசபை வழங்கி அவர்களை தயார்படுத்தியுள்ளது.

'திவிநெகும' திணைக்களத்தினால்; மக்களுக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்கள் என்ன அவர்கள் இத்திட்டத்தில் எவ்வாறு இணைந்து கொள்ள வேண்டும், மக்கள் கட்டமைப்புக்கள் எவ்வாறு உருவாக்கப்படவிருக்கின்றன போன்ற விடயங்கள் உள்ளடக்கியதான மக்களை அறிவூட்டும் வேலைத்திட்டம் இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பிரகாரம் நாட்டின் சகல மாவட்டங்களிலும், கிராமிய மட்டத்தில்; மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு அறிவூட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் சகல பிரிவுகளிலும் இவ் வாழ்வின் எழுச்சி வேலைத்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் செயற்படுத்தப்படவுள்ளதுடன்; தற்போது சமுர்த்தி திட்டத்துடன்  இணைந்துள்ள 3958 சமுர்த்தி உத்தியோகத்தர்களும் 360000 சமுர்த்திப் பயனுகரி குடும்பங்களும் நேரடியாக நன்மை பெறவுள்ளனர்.

30ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்த நாட்டினை மீட்டெடுத்து வறுமைக்கு எதிராக போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் அறிமுகப்படுத்தும் 'திவிநெகும' (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டம் அதற்காக தாபிக்கப்படும திணைக்களத்தினதும் நன்மைகள் வறுமையற்;ற இலங்கையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை இதற்காக பாடுபட்ட ஜனாதிபதி அவர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ உட்பட இத்திட்டத்தை உருவாக்க இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் உத்தியோகத்தர்களும், பயனுகரிகளும்; தவரவில்லை.

இன்றைய நாளின் கௌரவத்தை பிரஸ்தாபிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மதநிகழ்வுகளும் மக்களுக்கு விளிப்புணர்வூட்டும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளமை கற்ப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா