இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/06/2013

கிட்டங்கி தாம்போதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதனால் அவ்வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை

-ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் பிரதான வீதியிலுள்ள கிட்டங்கி தாம்போதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதனால் அவ்வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமும் விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பயணிக்கும் இவ் வீதியினூடாக வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் அப் பிரதானவீதியூடாக பயனிக்கும் மத்தியமுகாம், மண்டூர், சவளக்கடை, சாளம்பைக்கேணி, 06ம் கொளனி, போன்ற பிரதேசங்களில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மெற் கொண்டு வருகின்றனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது பொதுவாக அம்பாறை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா