இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/09/2013

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு கணனி உபகரணம் வழங்கி வைப்பு

(அகமட் எஸ். முகைடீன்)
ஆசிய மன்றம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபையின் வருமானத்தை மேம்படுத்தவும் மக்களிடமிருந்து அறவிடப்படவுள்ள சோலை வரியினை முறையாகப் பேணவும் மாநகர சபையின் வருமானம், செலவு முதலியவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையிலும் இணைய சேவையை அமுல்படுத்தும் திட்டத்திற்காக முன்று லட்சம் ருபா பெறுமதியான கணனி உபகரணத் தொகுதியொன்றினை அக்கரைப்பற்று மாநகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்கணனி உபகரணத் தொகுதியினை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்களிடம் ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் நேற்று கையளித்தார்.
மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா