இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/29/2013

லயன்ஸ் கழகத்தின் எற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(ஹனீபா)
சுனாமி அனர்த்தம் நடைபெற்ற 9வது வருட ஞாபகாத்தமாக கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் எற்பாட்டில் மைஹோப் குழுமத்தின் அனுசரனையுடன் வசதி குறைத்த குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (26) மாலை பாண்டிருப்பு பல்தேவைக்கட்டிடத்தில் கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுணர் லயன் லசந்தபெரேரா எம்.ஜே.எப், சிங்கபூர் நாட்டின் முன்னாள் ஆளுணர் சட்டத்தரணி லயன் சிங்கரத்தினம், மாவட்ட ஆளுணர் சபையின் கிழக்க மாகாணத்துக்கான பிரதிச் செயலாளர் லயன் எந்திரி என்.பி.ரஞ்சன், பிரதிப் பொருளாளர் பாஸ்கரன், பிராந்திய தலைவர் லயன்.எஸ்.தைரியராஜா,; கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனிபா, மைஹோப் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சித்தீக் நதீர், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் லயன் றிஸ்வி யஹ்ஷர்,ஊடகவியலாளரும் அகரம் அமைப்பின் தலைவரமான பி.துஷ்யந்தன் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

ஆயிரம் ரூபா பெறுமதியான பொதிகள் 50 பாண்டிருப்பு பிரதேசத்தில் வழங்கி வழங்கப்பட்டன அத்துடன் மருதமனை, துறைநீலாவனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு இன்று மாலை வழங்கி வைக்கப்படவுள்ளன.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா