இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/15/2014

சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விடுக்கும் செய்தி


(ஹனீபா)

ஒருவருக்கு காய்ச்சல் வந்து இரண்டு நாட்கள் நீடிக்குமாயின் நோயாளியை சிகிச்சைக்காக அரச வைத்திய சாலைகளில் அனுமதிக்கமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சல் வரும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் சகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கொழும்பு தேசிய வைத்திய சாலை, லேடி ரிச்வே சிறுவர் வைத்திய சாலை, களுபோவில வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் சில நாட்கள் காய்ச்சல் அதிகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு லேடி ரிச்வே வைத்திய சாலையில் கடந்த வருடம் 3631 பேர் டெங்கு நேய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அதில் 501 நபர்களுக்கு டெங்கு நேய் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதில் 17பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் அவதானமாக இருந்து காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு நாட்கள் நீடிக்குமாயின் அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெறுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா