இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2014

சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிழக்குப் பிராந்திய இரத்ததான முகாம்

(ஹனீபா)
சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் கிழக்குப் பிராந்திய அதாவது சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காத்தான்குடி, சவளக்கடை ஆகிய கிளைகளால் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாபெரும் இரத்ததான முகாமும், கண்காட்சியும் இன்று (14)சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் பல பிரதேசங்களிலுமுள்ள வைத்தியசாலைகளின் இரத்த தேவையினை பூர்த்தி செய்து கொடுக்கும் நோக்குடன் சுமார் 1000 பேரை இலக்காக கொண்டு  ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று  வரும் இந்த இரத்ததான முகாமில் ஆண்கள்,பொண்கள் இன,மத வேறுபாடின்றி கூடுதலான முறையில்  கலந்து கொண்டிருப்பது ஒரு சிறப்பம்சமாக காணக்கூடியதாகவுள்ளன.

சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.எம்.றியாழ் தலைமையில் நடைபெறும் இந்த முகாமில் அம்பாறை பொது வைத்திய சாலை, சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, மஹாஓயா ஆதார வைத்தியசாலை, மொனராகலை மாவட்ட ஆதார வைத்திய சாலை, கல்முனை ஆதார வைத்திய சாலை, பொலனறுவை ஆதார வைத்திய சாலை, நாரஹென்பிட்டி இரத்த வங்கியின் இரண்டு பிரிவுகள் என்பவைகளில் இருந்து கூடுதலான வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள், ஊளியர்கள்  இன, மத, பிரதேச, மொழி, நிறவேறுபாடுகளை கடந்து இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டிருப்பது விஷேட அம்சமாகும்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா