இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/14/2014

கல்முனை மாநகர ஆணையாளரினால் கல்முனை மாநகர பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்.

(ஹனீபா)
கல்முனை மாநகர சபையினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நடுக்கட்ட உத்தியோகத்தர்களின் (வரி அறவீட்டாளர்கள்) சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் சோலைவரிகளைச் செலுத்த வேண்டாம் என கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கல்முகை மாநகர சபை பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்று சோலைவரிகளை அறவிடும் பொருட்டு கடந்த 2012ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் 25 பேர் நடுக்கட்ட உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.

அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களின் சேவை 2013 டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டுள்ளதால் இவர்களில் யாராவது தங்கள் வீடுகளுக்கு வந்து சோலை வரிக் கட்டணங்களை கோரினால் அவர்களிடம் அதனை செலுத்த வேண்டாம் எனவும் மாநகர ஆணையாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை சோலைவரி செலுத்த வேண்டிய பொதுமக்கள் கல்முனை மாநகர சபைக்கு நேரடியாகவந்து அதற்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளிடம் அதனைச் செலுத்தி பற்றுச் சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

அதேவேளை கடந்த காலங்களில் தற்காலிக நடுக்கட்ட உத்தியோகத்தர்களினால் பொது மக்களிடம் அறிவிடப்பட்ட சோலைவரிப் பணங்கள் கல்முனை மாநகர சபையில் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிய வருவதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா