இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/31/2014

விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருவதாக மாகாண அமைச்சர் உறுதி


சாய்ந்தமருது வொலிவேரியன் வீடமைப்பு திட்டத்திலுள்ள ஐக்கிய விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருவதாக கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஏ.எம்.மன்சூர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சாய்ந்தமருதின் பழமை வாய்ந்த பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழக பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூருக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்று சம்மாந்துறையிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும் தபால் அதிபருமான யூ.எல்.எம்.பைஸர் தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போதே இந்த உறுதிமொழியினை மாகாண அமைச்சர் வழங்கியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள இளைஞர்களும் விளையாட்டு வீரர்களும் தமது விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடிய ஒரு பொருத்தமான மைதானம் இல்லாத குறையைச் குறித்த குழுவினர் மாகாண அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏற்கனவே சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்திருந்த தாமரை விளையாட்டு மைதானம் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை மற்றும் மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாயலம் என்பன அமைக்கப்படுவதற்கு பயன்படுத்தப்பட்டதனால்  மைதானம் இல்லாத நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். tm

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா