இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/08/2014

அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் அஸ்ஸாம் ஆற்றிய உரை

5வது அமர்வின் 9வது கூட்டத்தொடரில் 2014க்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளமன்ற உறுப்பினரும் ஆயுள்வேத வைத்திய மாணவருமான ஏ.ஆர். அஸ்ஸாம் ஆற்றிய உரை

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கௌரவ பிரதமர் அவர்களே, கௌரவ பிரதிக்கட்சி தலைவர் அவர்களே! 2014ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் 12105 ஆடைடழைn இளைஞர் விவகாரதிறன் அபிவிருத்தி அமைச்சிக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்நிதி மூலம் இளைஞர் பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுகிறேன். 

விவசாயம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நீர்ப்பாசனம், நிர்மானம், கப்பல் கட்டுமானம், சமுர்த்தி தொழில்நுட்பம் போன்றவைகளை நோக்;காகக் கொண்ட வரவு-செலவு திட்டமானது என்.வீ.கியு மட்டபட்டதாரிகளின் தொகையை அதிகரிக்கவும் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர்கள் மாணவர்களின் கொடுப்பனவை அதிகரிப்பும் பாராட்டக்கூடியது.
15000 மில்லியன் செலவில் 15000 மாணவர்களுக்காக 15 பல்கழைக்கழகங்களுக்கு விடுதி நிர்மானம் விரைவில் செய்யப்படவேண்டுமென எதிர்பாக்கின்றேன். அத்தோடு ஜயவர்தனபல்கழைக்கழகத்தில் பொருளியல் மற்றும் தொழில்நுட்பமும், களனியில் தகவல் தொழிற்நுட்பமும் பேராதனையில் உயர்தர மருத்துவபீடத்தையும் மொரட்டுவையில் இலத்திரனியில், விண்வெளிசார்பீடத்தையும் ஏனைய பல்கழைக்கழகங்களில் முகாமைத்துவத்திறன், உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றை விருத்திசெய்யும் முன் மொழிவானது சிறப்பானது.

நான் கல்வி பயிலும் ஆயுள்வேத துறையை நவீன மயப்படுத்த 9000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எமது தேசத்தின் வைத்தியத்தை நாமே பாதுகாக்க முன்வரவேண்டும் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியான எமது கல்லூரிக்கு கடந்த 30 வருடகால யுத்தத்தின் போதோ அல்லது அதற்கு பின்னரோ எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் பின்னர் வருகைதந்தமைக்கான பெயரை பெருவதற்காக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் இப் பாராளமன்றத்தினூடாக அழைக்கிறேன்.
அத்தோடு விசேட வைத்தியர்களை உருவாக்கும் நோக்கோடு பட்டபின் படிப்பு கல்லூரியை உருவாக்குகின்ற முன் மொழிவானது காலத்தின் தேவையானதாகும். அரச ஊழியர்களுக்கு 1200ஃ- தோட்ட மக்களுக்கு 50000 வீடுகள் விவசாயிகளுக்கு 1250ஃ- ஓய்வூதியம் விரிவுரையாளருக்கு 5மூ கொடுப்பனவு பெண் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி போக்குவரத்து சபைக்கு 2000 பஸ்கள் 10 இலட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கடல்சார் ஆயுள்வேத பல்கழைக்கழகம் என்பன சிறப்பாக இருந்தாலும் கூட செயற்பாட்டில் இடம் பெறவேண்டும் என்பதே எனது அவா, வெளிநாட்டவர்களுக்கு காணி விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது 'தன் கையே தனக்குதவி வெள்ளையனே வெளியேறு' என்பதற்கு இணங்க அரசு மீள் பொறுப்பேற்க வேண்டுமென பாராளமன்றத்தினூடாக கோரிக்கை விடுக்கிறேன்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு சீருடை கொடுப்பனவு 5 வருட நீதிமன்ற மறுசீரமைப்புப்புத் திட்டம் என்பன செயற்படுத்தப்படவேண்டுமென எதிர்பார்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, 1992ம் ஆண்டு தனியார் மயப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட கம்பனிகளை மீண்டும் அரச பொறுப்பேற்க வேண்டும் அதன் மூலமே அவர்களின் வாழ்வு சுபீட்சம் பெறும்.

வெளிநாட்டு நெடுந்தொடர் நாடகங்கள் குறிப்பாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெடுந்தொடர்களுக்கு வரியை அதிகரித்து எமது உள்ளுர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் அத்தோடு எமது தேசத்தின் கலை, கலாசார ஒழுக்கத்தை பேணிபாதுகாக்க முடியும்.

பொதுக்கல்விக்காக 125 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 80 மில்லியன் ஆசிரியர்களின் சம்பளத்திற்கு சென்றுவிடுகின்றது மிகுதியுள்ள பணம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு குறைவாகவே உள்ளது. இந்த வரவு-செலவு திட்டத்திலும் கடந்த வரவு செலவு திட்டத்தினூடாக கூறப்படும் நிவாரணங்கள் சில மக்களுக்கு சென்றடையவில்லை.

எனது குடும்பம் கூட வீடு சொத்தை இழந்தும் தனது பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் (பல.நோ.கூ) அரிசி ஆலை முகாமையாளராக இருந்து பல அச்சுருத்தலுக்கு மத்தியில் தேசத்திற்கான முன் நின்றார். இருந்த போதிலும் எந்த ஒரு நிவாரணமும் அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படவில்லை. 

கௌரவ சபாநாயகர் அவர்களே, யுத்திற்கெதிரான போரை விட மிகப்பெரிய போரான 'ஊழலுக்கெதிரான போரை முகங்கொடுக்க வேண்டியுள்ளது' எமது தேசத்தை இந்த ஊழல் ஆட்டிப்படைக்கின்றது இந்த ஊழலுக்கெதிராக இளைஞராகிய நாம் அணிதிரள வேண்டும்.
எந்தவொரு அரசாங்கத்தினூடாகவும் நிவாரணம் வழங்கப்படாத கூலித்தொழிளாளர்களின் நிலை தொடர்பில் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.

தலைப்புக்கள்

*   தனது மருத்துவ கல்லூரிக்கு ஜனாதிபதியையும், எதிர்கட்சி தலைவர் அவர்களையும் அழைக்கிறார். இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் ஏ.ஆர்
*    வெளிநாட்டவர்களிடம் விற்பனை செய்த காணிகளை மீண்டும் அரசு பொறுப்பேற்க வேண்டும் - இளைஞர் பாரபாமன்ற உறுப்பினர். ஏ.ஆர்
*    தனியார் மயப்படுத்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனியை அரசு பொறுப்பேற்க வேண்டும் (இ.பா.உ) ஏ.ஆர்
*    ஊழலுக்கானகெதிரான போருக்கு தயாராக வேண்டும் இ.பா.உ. எ.ஆர்.அஸ்ஸாம் கோரிக்கை
*    கூலிக்தொழிலாளிகள் மீது அரசாங்கம் அக்கறை எடுக்க வேண்டும் - அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளமன்ற உறுப்பினர் கோரிக்கை

   

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா