இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/18/2014

இலவச வைத்திய முகாம் (Photos)

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பிரபல சமூக சேவை அமைப்பான றிபாத் நன்பர்கள் ஒன்றியத்தின் 13வது வருட ஞாபகாத்தமாக சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள வருமானம் குறைந்த 300 குடும்பங்களுக்கு வைத்திய நிபுணர்களின் சேவையினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் எற்பாடு செயப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (18) காலையிலிருந்த சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.சியாத் நடைபெற்று வருகின்றன.

இந்த இலவச வைத்திய நிபுணத்துவ சேவையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலையின் விNஷட சத்திர சிகிச்சை நிபுணர்களான வைத்திய கலாநிதி ஏ.டபிள்யூ.எம்.சமீம், மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.காரியவசம், பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜயந்த விஜயபுர, தெஹியத்தகண்டிய வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி எம்.ஜே.எம்.எம்.சுல்பி மரைக்கார், ஏலும்பு நோய்களுக்கான வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி அஹமட் எம் மசூர், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி இப்லால் சுபைர், கல்முனை வடக்கு மற்றும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலை என்பவற்றின் இரத்த வங்கி பொறுப்பதிகாரியும் சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் தலைவருமான லயன் டாக்டர் எம்.ஐ.எம்.சிறாஜ், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த வைத்திய சாலையின் உளநல வைத்திய அதிகாரி எம்.ஜே.நௌபல், டாக்டர் ஏ.றிஸ்வான், டாக்டர் எம்.றமீஸ், கிழக்க மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் பொதுசன தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர், இணைப்பதிகாரி எம்.ஐ.எம்.தபீக்,சம்மாந்துறை கோல்டன் சிட்டி லயன்ஸ் கழகத்தின் சிரேஷ;ட தலைவர் எம்.இப்றாலெப்பை உட்பட பல வைத்தயர்களும் தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், தொண்டர்களாக பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா