இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2014

தப்லிகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா

(ஹனீபா)
சம்மாந்துறை தப்லிகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா, 40வது ஆண்டுப் பூர்த்தி விழா, நிர்வாக கட்டிட திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் இன்று (27) வியாழக்கிழமை கல்லாரி வளாகத்தில் நடைபெற்றது.

இரண்டு அங்கமாக இடம்பெற்ற இவ்வைபவத்தில் 40வது ஆண்டுப் பூர்த்தி விழா, நிர்வாக கட்டிட திறப்பு விழாவுக்கு சம்மாந்தறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் தலைவர் கலாநிதி ஐ.எம்.இப்றாஹீம் தலைமையிலும் 16வது பட்டமளிப்பு விழா சம்மாந்தறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி Nஷகுத் தப்லீக் எம்.பி.அலியார் ஹஸரத் (தேவ்பந்தி) தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக தெஹிவளை இப்னு உமர் கலாபீடத்தின் ஹதீஸ் உயர் கற்கைக்கான பணிப்பாளர் அஷ;nஷய்க் எம்.ஜே.அப்துல் ஹாலிக் ஹஸரத் (தேவுபந்தி) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிழக்குமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எ.மன்சூர், அல்மதீனா முனவ்வறா தல்லா தைபா ஹொட்டல் பொதுமுகாமையாளரின் தந்தை ஜீ.எஸ்.எம்.றவூப் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் காதர் ஹசரத் உட்பட இலங்கையின் பலபாகங்களிலும் உள்ள அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள், முஸ்லீம் சமய கலாசார திணைக்களத்தின் அதிகாரிகள், சிரேஷ;ட உலமாக்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தவைபவத்தில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் சிரேஷ;ட முதல் மாணவன் மௌலவி ஆசிரியர் கே.எல்.ஆதம்பாவா (மதனி) அவர்களினால் வெளியிடப்பட்ட 'வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கான தமிழ் மொழி மூலம் அரபு' எனும் நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது இந் நூல் தொடர்பான நூல் அறிமுக உரையினை மௌலவி எம்.ஐ.ஹூசைனுதீன் அவர்களினால் நடத்தப்பட்டது.

இந்த முப்பெரும் விழாவில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியில் கல்வியினை கற்ற நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 33 மௌலவிகளுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்;பட்டனர். அத்துடன் விNஷட திறமைகளை வெளிக்காட்டிய உலமாக்கள் பலரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.








0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா