இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/16/2014

சம்மாந்துறையில் நான்கு தினங்களாக எரிபொருள் இல்லை

(ஹனீபா)
சம்மாந்துறையிலுள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிறப்பு நிலையம் கடந்த வியாழக்கிழமை (13)ம் திகதி பிற்பகலில்; இருந்து இன்றுவரைக்கும் நான்கு தினங்களாக எரிபொருள் இல்லை என்ற விளம்பரத்துடன் மூடப்பட்டுக் காணப்படுகின்றன இதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளதுடன் பலசிரமங்களையும் எதிர்நோக்கி தங்களது விசனங்களையும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் இந்த அசௌகரிகத்தினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை தொடர்பாக சம்மாந்துறைப் பல நோக்க கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏ.எம்.ஆப்தல் றசீட்டை தொடர்பு கொண்ட கேட்ட போது அவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த 2014.02.13ம் திகதி பிற்பகலிலிருந்து இருப்பிலிருந்த எரிபொருளகள் அனைத்தும்; முடிந்துள்ளதாகவும் அதற்க முன்கூட்டியே மீள எரிபொருட்களை பொற்றுக் கொள்வதற்கான காசோலைகளை அனுப்பி வைக்கும் போதுதான் வெள்ளி,சனி,ஞாயிறு,திங்கள் ஆகிய தினங்களுக்குரிய எரிபொறுட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த நடைமுறையினை மேற் கொள்வதற்கான சகல எற்பாடுகளும் மேற் கொள்ளப்பட்டு காசோலைகளும் வரையப்பட்ட நிலையில் காசோலையில் சம்மாந்துறைப் பல நொக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் சீ.டீ.ஓ சித்தீக் என்பவர் கையொப்பமிட மறுத்து விட்டு தனது கையடக்க தொலைபோசியினையும் ஓப் செய்து விட்டு இருந்ததனால் உரிய நேரத்துக்கு பொற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை கொள்வனவு செய்யமுடியாதநிலை ஏற்பட்டது இதனால் ஏரிபொருள்; நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும தெரிவித்தார்.  

இந்த விடயத்தை இந்தப் பிரதேச வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் அறிந்து கொள்ளும் பொறுட்டும் சம்பவம் தொடர்பாக எரிபொருள் இயந்திரத்தில் விளம்பரப்படுத்தியிருப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.

இவர்களின் இழுத்தடிப்புக்கள் குரோதங்கள் காரணமாக பாதிப்படைந்துள்ளவர்கள் பொதுமக்களாகும் சம்மாந்துறைப் பிரதேசம் அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான விவசாயக் காணிகளைக் கொண்ட விவசாயப் பிரதேசமாகும் தற்கோது அறுவடை ஆரம்பித்துள்ளது அறுவடை இயந்திரங்கள், டிரக்டர்கள், டிப்பர் வாகனங்களுக்கு கூடுதலான எரிபொருட்கள் தெவைப்படும்; இந்த கால கட்டத்தில்; இந்த அதிகாரிகளின் இழுத்தடிப்புக்களினால் பொதுமக்கள் எரிபொருள் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவத்துடன் தொடர்புடையவர்களை விசாரணைக்கு உட்படுத்தி தக்க நடவடிக்கையினை எடுக்க சம்மந்தப்பட்ட  உயர் அதிகாரிகள் முன்வரவேண்டும் பொதுமக்கள் கொரிக்கை விடுத்துள்ளனர். விளம்பரம் தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா