இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/03/2014

தேசிய தினத்தில் தேசிய உணர்வை பலப்படுத்துவோம்! - தேசிய ஷூறா சபையின் வேண்டுகோள்

இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், உலமாக்கள், பூத்திஜீவிகள், துறைசார்ந்தோர் என பலரும் கலந்துகொண்ட, 2014.01.25 அன்று கொழும்பில் நடைபெற்ற தேசிய ஷூறா சபையின் அங்குரார்ப்பணப் பொதுக்கூட்டத்‌தில் மாஷூறா செய்யப்பட்டதன் தீர்மானித்ததன் பிரகாரம் 66 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள் பற்றிய பின்வரும்  சுற்றரிக்கை வெளியிடப்படுகிறது.  

1.    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது தேசத்தை மீட்டெடுத்த சுதந்திர இலங்கையின் தேசியத்  தலைவர்களின் பங்களிப்பினை நினைவுபடுத்திஇ அவர்களின் பங்களிப்பினை கெளரவித்து எமது தாய் நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் நாளாக பெப்ரவரி 04 ஆம் திகதி அமைய வேண்டும்.

2.    குறித்த தினத்தன்று, வீடுகள், இஸ்லாமிய நிறுவனங்கள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் என்பவற்றில் எமது தேசிய கொடியினை உரிய முறையில் பறக்கவிடல் வேண்டும்.

3.    பொதுக் கூட்டங்கள்இ துண்டுப் பிரசுரங்கள், பதாதைகள்இ சுவரொட்டிகள் என்பன மூலம், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய தேசிய தலைவர்களாகிய கலாநிதி வு.டீ. ஜாயாஇ சேர் ராஸிக் பரீட் மற்றும் அல்-ஹாஜ் வைத். ஆ.ஊ.ஆ. கலீல் ஆகியோர் எத்தகைய நிபந்தனைகளும் இன்றி தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக பூரண ஆதரவு தெரிவித்தமையையும், அதனை அன்றைய தேசிய சிங்களத் தலைவர்கள்இ குறிப்பாக ளு.று.சு.னு. பண்டாரநாயக்க பேன்ற தலைவர்கள் பெருமையுடன் வரவேற்று முஸ்லிம் இனத்தின் பெருந்தன்மையையும், தேசப்பற்றையும் உறுப்படுத்திய நிகழ்வுகளும் நினைவு கூறப்படல் வேண்டும்.

4.    மேலும் இத் தினத்தில்இ தேசிய ஓற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு சகோதர இன மக்களுடன் இணைந்து சிரமதானம்இ இரத்ததானம்இ தேவை உடையவர்களை இனங்கண்டு உதவி செய்தல்இ மர நடுகை போன்ற விடயங்கள் மஸ்ஜித்கள் ஊடாக முன்னெடுக்க முடியும்.
ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன்!

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா