இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/23/2014

நடனத்தால் தேசத்தின் மகுடத்தில் கலக்கிய தமிழ் மாணவி!

குருணாகலில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் இரண்டாம் நாள் நிகழ்வான இன்று மன்னாரில் இருந்து வந்திருக்கின்ற தலைமன்னார்துறை அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால் தமிழர் கலாசார அரங்காற்று நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டன.

பரத நாட்டியம், கும்மி, சுளகு நடனம், செம்பு நடனம், கரகம், மயிலாட்டம் என்று ஆறு வகையான நடனங்களை மேடை ஏற்றினார்கள்.

அதிபர் எஸ். செல்வரஞ்சனின் வழிகாட்டலில் நடன ஆசிரியை மேரிமேகலா ஜோன்நிகால் இவர்களை நெறிப்படுத்தி இருந்தார்.

க. பொ. த உயர்தர இறுதி ஆண்டு மாணவி கியோமர் லூட்ஸ் டிலாந்தி டலிமாவின் கரகாட்டம் பார்வையாளர்களின் அபிமானத்தை பெரிதும் வென்று இருந்தது.

 மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் சமூக அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் நந்தன விஜேசிங்கவின் ஆசியுடன் இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிசுதிரிய வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டின் பல பாடசாலைகளில் இருந்தும் மாணவர்கள் அரங்காற்றுகைத் திறமைகளை வெளிப்படுத்த தேசத்தின் மகுடம் கண்காட்சியில் பங்கேற்கின்றார்கள். குறிப்பாக தெற்குக்கும் வடக்குக்கும் இடையிலான உறவுப் பாலமாக இன்றைய நிகழ்ச்சிகள் அமைந்தன.

இக்கண்காட்சியில் பங்கேற்கின்றமை குறித்து ஆசிரியை மேரிமேகலா கருத்துக் கூறுகையில் தமிழ் மாணவர்களின் திறமைக்கான களமாகவும், தமிழர் கலாசாரத்தை சகோதர இன மக்களுக்கு தெரிய வைக்கின்றமைக்கு அருமையான சந்தர்ப்பமாகவும் இக்கண்காட்சியை பார்க்க முடிகின்றது, இச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்காக ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவுக்குத்தான் உள்ளம் நிறைந்த நன்றிகளை கூற வேண்டும் என்றார்.​



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா