(ஹனீபா)
சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் மஸ்ஜிதுல்; அப்றார் பள்ளிவாசல் பிரதேசத்துக்கட்பட்ட குர்ஆன் மதரசா மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) பிற்பகல் 2.30 மணிக்கு பள்ளிவாசல் தலைவர் எம்.உமர்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் மஸ்ஜிதுல்; அப்றார் பள்ளிவாசல் பிரதேசத்துக்கட்பட்ட குர்ஆன் மதரசா மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) பிற்பகல் 2.30 மணிக்கு பள்ளிவாசல் தலைவர் எம்.உமர்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன கலந்து கொண்டார் அதிதிகளாக சம்மாந்துறை வை.என் ரவல்ஸ் நிறுவனத்தின் அதிபர் எம்.எஸ்.யாஸ்தீன்,பாராளுமன்ற உறப்பினரின் செயலாளர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் பொமக்கள் பலரும் கலந்த கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஜாதி, மதம், மொழி வேறுபாடுகள் தேவையில்லை எமக்கு கிடைத்திருக்கின்ற அரசியல் அமானிதத்தை கொண்டு முடியமான அளவு ஏழை மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.
அந்தவகையில் தான் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல கிராமங்களுக்கும் சென்று என்னால் முடியுமான அளவு பணிகளை செய்து வருகின்றேன் சகோதரர் யாஸ்தீன் அவர்கள் இந்தப் பள்ளிவாசல் அபிவிருத்தி தொடர்பாக என்னிடம் கதைத்தார் அதனைப் பார்வையிட வருமாறு கேட்டுக் கொண்டார் அதற்கமைவாக நான் இங்கு வந்து குறைபாடுகளை அறிந்த கொண்டேன் நான் வரும் பொது வெறும் கையுடன் வரக்கூடாது என்பதற்காக இப்பிரதேச குர்ஆன் மதரசா மாணவர்களுக்கு குர்ஆன் பிரதிகளை கொண்டு வந்துள்ளேன் மிகவிரைவில் இப்பள்ளிவாசலின் அபிவிருத்திக்கு உதவவுள்ளேன்.
இப்பள்ளிவாசல் தொடர்பாக சிலமாதங்களுக்கு முன்னர் என்னிடம் தெரியப்படுத்தியிருப்பின் தயட்டகிருள வேலைத்திட்டத்தின் கீழ் நிதிகளை ஒதுக்கியிருக்கமுடியும் இருந்தாலும் நான் உதவுவேன் எனக் கூறினார்.
இந்த வைபவத்தில் பள்ளிவாசல் பெயின்ட் அடிப்பதற்காக சம்மாந்துறை வை.என். ரவல்ஸ் நிறுவனத்தின் அதிபர் எம்.எஸ்.யாஸ்தீன் அவர்களினால் வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபா காசோலையினை பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பள்ளிவாசல் தலைவரிடம் வழங்கி வைத்ததார்.






0 comments:
Post a Comment