இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/08/2014

புலமைத் தாரகை – 2013

-எம்.வை.அமீர்-
கடந்தமுறை அம்பாறை மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமுஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த  மாணவர்கள் சுமார் 500 பேருக்கு எதிர்வரும் 08.03.2014 ஆந் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணிஅக்கறைப்பற்று அதாவுல்லா மண்டபத்தில் பதக்கம் அணிவித்து பாராட்டும்நிகழ்வும் கல்வி அபிவிருத்திக்கான அமைத்தினால் (EDF) நடாத்துவதற்குஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும்இ இந் நிகழ்வில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் மாணவர்கள் 41 பேர்பாராட்டப்படுவதுடன் மாவட்ட ரீதியில் முதன்மையான மாணவனான ARM. சியானுல்ஹனீன் அவர்களை விசேடமாக கௌரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.இம்மாணவர்களை இந் நிகழ்வில் பங்கு பற்ற வைப்பதற்கானமுயற்சிகள்  இப்பாடசாலையின் பிரதி அதிபரான ஏ.எம். தாஹா நழீம் அவர்களால்ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மேற்படிஇவ்வமைப்பானது முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டு நடவடிக்கையில் கூடியகவனம் செலுத்துவதுடன் ஒவ்வொரு வருடம் இவ்வாறான நிகழ்வு இவர்களால்நடாத்தப்படுகின்றன.

அத்துடன்இந் நிறுவனத்தின் Wamyஎன்ற அமைப்பின் ஊடாக புலமைப்பரிசில் பரீட்சைஎழுதும் மாணவர்களுக்கு இலவச முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள்வழங்கப்பட்டு மாணவர்கள் வளப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் இங்குகோடிட்டுக் காட்ட வேண்டும். இதனால்இ இவ்வாறான அமைப்பிபுகளின் செயற்பாடுகள்மூலம் எமது முஸ்லிம் சமூகமத்தின் கல்வி மேம்பாட்டு பக்கபலமாக இருக்கும்என்பதில் யாரும் மறுக்க முடியாது.

சம்மாந்துறைமுஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் யாருக்காவதுகடிதங்கள் கிடைக்கப் பெறாவிட்டால் உடன் இத்தொலை இலக்கத்துடன் (0771100221) தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்.
 

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா