இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/29/2014

சாய்ந்தமருதில் மாணவ சாதனையாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்

-எம்.வை.அமீர்.,எம்.ஐ.சம்சுதீன்-

மிக நீண்ட இழுபறிகளின் பின்னர் சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலின் நம்பிக்கையாளர்சபை புதிதாக நியமிக்கப்பட்டதன் பின்னர் அச்சபை விரைந்து பல நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.

புதிதாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர்சபை மற்றும் அச்சபை மேட்கொள்ளவுள்ள நடவடிக்கைகள், வேலைத்திட்டங்கள் விசேடமாக கல்வியில் சாதனை படைத்துள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் தொடர்பாக பத்திரிகயாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு 2014-04-28 மாலை சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்துத்தெரிவித்த நம்பிக்கையாளர்சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா, அகில இலங்கை ரீதியில் மிகப்பெரிய அதாவது 99 பேரைக்கொண்ட சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலின் நம்பிக்கையாளர்சபை தங்களது வேலைகளை இலகுபடுத்துவதற்காக 16 குழுக்களாக பிரிந்து செயற்படுவதாகவும் தெரிவத்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வை.எம்.ஹனீபா, எதிர்வரும் 2014-05-04 ம் திகதி சாய்ந்தமருது ஜும்மாபள்ளிவாசலின்ஏற்பாட்டின் கீழ் சாந்தமருது பேமிலி சொய்ஸ் அனுசரணையுடன் கடந்த காலங்களில் இடம்பெற்ற பரீட்சைகளில் சாதனைகளை பெற்ற மாணவ சாதனையாளர்களை கௌரவிக்கவுள்ள அதேவேளை உலக சமாதான அமைப்பின் இலங்கை தூதுவராக நியமனம் பெற்றுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளாதாகவும் சாய்ந்தமருது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு விடையத்தில் பாரியளவிலான முன்னடுப்புக்களை எதிர்காலத்தில் செய்யத்திட்டமிட்டுள்ளதாகவும் இச் செயற்பாடுகளுக்கு பிரதேச அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பை கோரி நிற்பதாகவும் தெரிவித்தார்.

5 ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 32 மாணவர்களும் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் 9Aசித்திகளை பெற்ற 16 மாணவர்களும் 8A சித்திகளை பெற்ற 25 மாணவர்களும் 7A சித்திகளை பெற்ற 27 மாணவர்களும் இங்கு கெளரவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா