இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/01/2014

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்து செய்தி

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், ஜனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும், சிறீ லங்கா சுதந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். நௌசாட் மேதின வாழ்த்துச் செய்தி.
2014-05-01
உலகெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களுடன் இணைந்து சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இலங்கையின் அனைத்து தொழிலாளர்களுக்கும்  மனமார்ந்த வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருஉவகையடைகிறேன். 
எமது பிரதேசத்தின், மாகாணத்தின்,  நாட்டின்  மற்றும் முழு உலகத்தினதும் செழிப்பிற்கும் சிறந்த அபிவிருதிக்கும் உழைக்கும் தொழிலாளர்களே  காரண கர்த்தாக்களாவர்.  உழைக்கும் தொழிலாளர்கள் தங்களின் உயரிய அர்ப்பணிப்பு, செயலூக்கம் என்பவற்றின் மூலம் எதிர்காலத்திலும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
அபிவிருத்தி இலக்கை அடைந்து கொள்வதற்காக  வேறுபாடுகளை மறந்து நாம் உழைக்க வேண்டும் , நமது எதிர்கால சந்ததியினரின் நலனையும் நமது நாட்டின் நலனையம் கருத்திற் கொண்டு செயற்படவேண்டியது உழைப்பாளர்களின் கடமையும் பொறுப்புமாகும். அறிவு ஜீவிகள் பாரிய பணிகளை ஆரம்பிக்கிறார்கள் , உழைப்பாளிகள் அதனை தனியே செய்து முடிக்கிறார்கள்.
உழைப்பின் மேன்மை, உழைப்பாளர் களின் சிறப்பை வெளிப்படுத்தி, பாதுகாப்புடனும், உறுதியுடனும் பணியாற்றி நாடு செழித்தோங்க உறுதி பூணுவோம்

அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாட்
தவிசாளர்
சம்மாந்துறை பிரதேச சபை

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா