இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/06/2014

உயர்தர வணிகக்கல்வி பரீட்சை வழிகாட்டி பாடப்புத்தக வெளியீட்டு விழா

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
க.பொ.த (உ/த) பரீட்சையில் 'வணிகக்கல்வி' பாடத்திற்கு தோற்றும் மாணவர்களுக்காக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) வணிகப்பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம்.அஜ்வத்அலி அவர்களால் எழுதப்பட்டு இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ள 'உயர்தர வணிகக்கல்வி தரம் 13 பரீட்சை வழிகாட்டி பாடப்புத்தக வெளியீட்டு விழா' அண்மையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் ஜனாப் எச்.எம்.பாறூக் தலைமையில் பாடசாலை வணிகக்கழக ஏற்பாட்டில் விமர்சையாக இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக பேராதனை பல்கலைகழகத்தின் முகாமைத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் திரு வீ.தர்மதாசன் அவர்களும் கௌரவ அதிதியாக வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களும் விசேட அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீட பீடாதிபதி ஜனாபா சரீனா யூ.எம்.ஏ.கபூர் அவர்களும் மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும் கணக்கீட்டு நிதித்துறை தலைவர் ஜனாபா ஏ.எம்.ஐனுன் ஜாரியா அவர்களும் முதுநிலை விரிவுரையாளர எம்.ஏ.எம்.ஹுசைன்அலி அவர்களும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஐ.ஏ.றசூல் உட்பட பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஏனைய வலய வணிகத்துறை ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவின் போது புத்தகத்தின் முதற்பிரதிகள் நூலாசிரியர் ஏ.ஆர்.எம்.அஜ்வத்அலி அவர்களால்  பிரதம அதிதி, கௌரவ அதிதி, பாடசாலை அதிபர் மற்றும் அதிதிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக இவ்வருடம் இப்பாடசாலை வணிகப்பிரிவு மாணவர்களால் தேசியமட்டத்தில்  இடம்பெற்ற உற்பத்திக்கான வணிகத்திட்டப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்றமைக்காக கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்ட தங்கவிருது கோல்ட் அவார்ட் யினை பிரதம அதிதி மூலம் பாடசாலை அதிபருக்கு வழங்கிவைக்கும்; வைபவமும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா