இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/29/2014

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் கழக அங்கத்தவர்கள் மற்றும் மத்தியஸ்த்த சங்க உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் கழக அங்கத்தவர்கள் மற்றும் மத்தியஸ்த்த சங்க உறுப்பினர்களுக்கான உதைபந்தாட்டம் மற்றும்  அதனோடிணைந்த நுணுக்கங்கள் சம்மந்தமாமான பயிற்சி பட்டறை 2014-04-27 ம் திகதி மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதான கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இப் பயிற்சி பட்டறையை இச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் மாநகரசபை உறுப்பினர் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.

பயிற்சி பட்டறையின் முக்கிய வளவாளராக ஆசிய உதைபந்தாட்ட சங்கத்தின் இணைப்பாளர் எம்.சீ. ஜமால்டீன் பங்கு கொண்டு உதைபந்தாட்டம் தொடர்பான முக்கிய நுணுக்க செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கங்களை தமிழ் சிங்கள மொழிகளில் பங்கு பற்றுனர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மற்றும் இச்சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்த அதேவேளை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தில் அங்கம் வகிக்கும் 27 க்கு மேற்பட்ட கழகங்களில் அங்கம் வகிக்கும் வீரர்களும் 20 மத்தியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா