இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/27/2014

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்;

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ் !

கண்ணியத்திற்குரிய உலமாக்களே,ஊர் பிரமுகர்களே,சகோதர,சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈகையை நினைவூட்டிக் கொண்டிருக்கும் இவ்வினிய நோன்புப் பெருநாள் தினத்திலே உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

வினாடிக்கு வினாடி மாறி வருகின்ற இவ்வுலகில், இம்மியளவேனும் மாற்றமடையாமலிருக்கின்ற - மாற்றவே முடியாத, புனித அல் குர்ஆன் இறங்கிய இம் மாதத்தில் அதனை பாராயனம் செய்து, நோன்பு நோற்று அதனோடு ஒட்டிய அமல்களில் ஈடுபட்டு இன்று நாம் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

எமக்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இப்புனிதக் குர்ஆன் ஆனது இவ்வுலகின் கண். அந்தவகையில் ஆகக் குறைந்தது இவ்வாறான ஒவ்வொரு விஷேட தினங்களிலும் இப்புனிதக் அல் குர்ஆனை அடியொட்டி குறிப்பிட்ட ஒரு நோக்கினையாவது விஷேட செயற்பாடாக கொள்வோமெனில் காலப் போக்கில் குர்ஆனை முழுமையாகவே பின்பற்றியவர்களாகிவிடுவோம் என எண்ணுகின்றேன். இப்புனித நோன்பு காலத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் றஹ்மத் மஃபிறத் என்பவற்றுடன் இத்துக்கும் மினன்னார், நரக நெருப்பில் இருந்தும் மீட்சி பெற பிரார்த்தித்து பெருநாளைக் கொண்டாடுவோமாக....!

நாம் இப்புனித தினத்திலே சுத்தம் ஈமானில் பாதி எனும் நபி (ஸல்) அவர்களின் வார்த்தையை இதயத்தில் இருத்தி அதற்கு ஒப்ப நோன்பினால் பெற்ற பயிற்ச்சியைக் கொண்டு, உள்மனத் தூய்மையுடன் எமது வணக்கஸ்தளங்களை எமது வீடுகளை, எமது கடைகளை, எமது தொழில் நிலையங்களை அவற்றின் சுற்றுச் சூழலை இவற்றோடு ஒத்த சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், அசுத்தமற்ற நகராகப் பேணுவதுடன் குப்பை கூழங்களற்ற குடிமனைப் பிரதேசமாக எம்மண்ணை மாற்றி வெளிச் சுத்தங்களைப் பேணி நோய் நொடியற்ற ஒரு சமூகமாக வாழ இறைவன் எமக்கு அருள் புரியப் பிராத்திக்கின்றேன்.

சமூகத்தின் பிரதான அங்கமான நாம் ஒவ்வொருவரும், இந்த சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க தனித்தும், ஒருமித்தும் பங்களிப்புச் செய்பவர்களாக மாற அந்த வல்ல இறைவன் எம்மை ஆக்கி அருள வேண்டும் எனப் பிராத்தித்து இதனை ஒரு வேண்டுகோளாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

 எமது வீட்டு முற்றம் தொடக்கம் ஆகக்குறைந்தது எமது வீட்டுக்கு முன் உள்ள வடிகான் வரையாவது சுத்தத்தி;னைப் பேண இப்புனித பொருநாள் தினத்தில் இருந்து திடசந்தர்ப்பம் பேண வேண்டியதுடன் மீண்டும் ஒரு முறை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்வுறும்.


உங்கள் அன்பின்
கௌரவ அல் - ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட்
தவிசாளர்
பிரதேச சபை 
சம்மாந்துறை


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா