இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/28/2014

ஈதுல்-பித்ர் புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


புனிதமிகு ரமழான் (நோன்பு) பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய நெஞ்சம்களுக்கும் இதயபூர்வமான ஈதுல்-பித்ர் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். 

புனித நோன்பு வெறுமனே பட்டனி இருப்பதை (உண்ணாமல் இருப்பதை) கற்றுதரவில்லை மாறாக ஏழையின் பசி, உடல், உள, சமூக ரீதியான நேரிய வழிமுறைகளை கற்று தருவதோடு மாத்திரமல்லாமல் ஆண்மீக வாழ்விற்கான வழிகாட்டியாகவும், பெறுமை, இறைபக்கி, உலக வாழ்வின் யதார்த ரீதயாகவும் பல பலன்களைதரும் புனித ரமழான் இறைவனின் மிக பெரிய அருட்கொடை ஆகும்.

இன்று எமது நாட்டில் சில குழுக்களினால் சட்டம் சீர்குலைந்து முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமில்லாமல் இந்து, கிறிஸ்தவ ஏன்? பௌத்த மக்களுக்கும் இன்னல்களை ஏற்படுத்தி வேற்றுமை உணர்வை இனங்களிடையே தூண்டிவிடபட்டுள்ளதோடு, அரசியல் அமைப்பின் அத்தியாயம்-02 உறுப்புரை-09 குறிப்பிடபடும் மதம் சம்பந்தமான விடயமும், அத்தியாயம்-03 யில் குறிப்பிடப்படும் மனித உரிமையும் அதிலும் 14ம் உறுப்புரையில் குறிப்பிடப்படும் சமத்துவம் கேள்வி குறியாக்கப்பட்டுள்ளமையை அரசாங்கம் செவிசாய்க்காமல், அவர்களுக்கு ஏற்றாபோல் தலைசாய்க்கும் நிலைமையில் இருந்து இறைவன்தான் எம்மை பாதுகாக்க வேண்டும்.

எதிர்காலத்திலாவது 'பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற சமயங்கள் சமாதானத்துகாகதான் சண்டையிடுவதற்கு அல்ல' என்ற யதாதத்தை உணர்ந்து அனைத்து இனமக்களும் மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்த ஒரு வாழ்கையை இலங்கை மக்கள் மாத்திரமில்லாமல் உலகத்திற்கு கிடைக்க வேண்டும் எனவும் பலஸ்தீன, காஸா, மக்களுக்கு விடிவு கிடைக்கவும் பிராத்திக்கின்றேன். 

ஏ.ஆர்.அஸ்ஸாம்
அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்
இளைஞர் பாராளுமன்ற 10 ஆளும் கட்சி உறுப்பினர்


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா