இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/07/2014

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும், தவிசாளர் புலமைப்பரிசில் திட்ட 2ம் கட்ட அறிமுகமும்.

(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அல்-ஹாஜ். ஏ.எம்.எம். நௌஷாட் அவர்களின் நெறிப்படுத்தலில், இம்முறை கா.பொ.த உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களின் நலன் கருதி, வழங்கப்படவிருக்கின்ற புலமைப் பரீசிலின் கீழ் நடைபெறவிருக்கின்ற பயிற்சி நெறிக்கான (கணனி, ஆங்கிலப் பயிற்சி நெறி) அனுமதியும், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கும், (2014.09.06) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் தவிசாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு ஏ.எல். பதூர்தீன் (அதிபர், ஹாடி உயர் தொழில் நுட்பக் கல்லூரி – அம்பாறை) அவர்களும், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா