இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/15/2014

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் விழா

(எம் ரீ எம் பர்ஹான்) 
கா. பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலயத்தில் இருந்து 103 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம் மாணவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்கும் விழா 15. 10. 2014 ம் திகதி இன்று சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் எம். எஸ். எஸ் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல் - ஹாஜ் ஏ. எம். எம் நௌஷாட் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம். எல். ஏ அமீர் உட்பட, சம்மாந்துறை உதவி வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டு ஒரு மாணவருக்கு ஒதுக்கப்பட்ட 12 000 ரூபாய் ஜனாதிபதி புலமைப்பரிசில் இருந்து 6 000 ரூபாய் வீதம் 103 மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது.







0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா