இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/06/2014

MYSDA அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

(எம்.ரீ.எம். பர்ஹான்)
MYSDA அமைப்பின் ஏற்பாட்டிலும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரனையிலும் இரத்த தான முகாம் ஒன்று இன்று சம்மாந்ததுறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சமூக சேவகர் தேசமானிய எம்.எம். சமீர் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலை, கல்முனை அஸ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலை, கல்முனை வடக்கு தள வைத்தியசாலை, அம்பாறை மத்திய வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன் நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்களான எம்.ஐ.சிறாஜ் மற்றும என்.றமேஷ் அவர்களுக்கும் இரத்ததானம் செய்த அனைவருக்கும் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா